search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர்கள் சம்பளம்"

    தமிழகத்தில் அனைத்து துறை அரசு ஊழியர் ஊதியத்துக்காக ரூ.2,63,828.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
    * நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    * தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்துக்கு ரூ.172 கோடி ஒதுக்கீடு
    * கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ரூ.230.89 கோடி ஒதுக்கீடு
    * ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.4570 கோடி ஒதுக்கீடு

    * சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ரூ.1546 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி
    * சிவகங்கை கோட்டத்தில் 622 கிமீ சாலை பணிகளுக்கு ரூ.715 கோடி ஒதுக்கீடு
    * தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.459 கோடி ஒதுக்கீடு
    * சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் 654 கிலோ மீட்டர் சாலைப்பணிகள் நடந்துள்ளது
    * சிறு துறைமுகங்கள் துறைக்காக 13,605 கோடி ரூபாய் ஒதுக்கீடு



    * தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசு பள்ளி மாணவர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்
    * மத்திய அரசிடமிருந்து உதவி மானியமாக ரூ.25,602.74 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
    * 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும்
    * அனைத்து துறை அரசு ஊழியர் ஊதியத்துக்காக ரூ.2,63,828.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Ramadoss #PMK #EdappadiPalaniswami
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

    அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.



    சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் மிகவும் மரியாதைக்குறைவாக பேசும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

    ‘‘அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்’’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படிப்பட்டவர் அவருக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சிப்பது முறையல்ல.

    அரசு ஊழியர்கள் முதல்-அமைச்சரிடம் வந்து இனாம் கேட்கவில்லை. அவர்களின் உரிமைகளை மட்டும் தான் கேட்கிறார்கள்.

    தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆகும் செலவை விட ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #PMK #EdappadiPalaniswami

    ×